30.8 C
Chennai
Monday, May 20, 2024
155981
ஆரோக்கிய உணவு

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூண்டை எவ்வாறு எடுத்தக்கொள்ள வேண்டும்? தெரிஞ்சிக்கங்க…

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.

பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

இதில் பலவகையில் உடலுக்கு நன்மை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். மேலும் அக்காலத்தில் சளி பிரச்சனைக்கு இந்த பூண்டு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.

பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.
2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 -3 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

Related posts

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

nathan

சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாலட்

nathan

உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’ -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

முருங்கைப்பூவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயமாக இந்த கீரையை சாப்பிட வேண்டுமாம்!

nathan

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த.. தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

உடலுக்கு எமனாகும் பரோட்டா

nathan