30.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

தீபாவளி ஸ்பெஷல் முந்திரி – பாதாம் ரோல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முந்திரி, பாதாமை வைத்து ஒரு புதிய இனிப்பை இந்த தீபாவளிக்கு முயற்சி செய்து பார்க்கலாம்.

தீபாவளி ஸ்பெஷல் முந்திரி – பாதாம் ரோல்
தேவையான பொருட்கள் :

முந்திரி, சர்க்கரை – தலா முக்கால் கப்.
பாதாம் – அரை கப்.
சர்க்கரைத்தூள் – ஒரு ஸ்பூன்.
ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்.
பச்சை கலர் பவுடர் – சிறிதளவு.

செய்முறை :

* முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, முந்திரி பவுடரில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.

* சிறிது சூடு இருக்கும்போதே நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இடவும்.

* வெறும் கடாயில் பாதாம்பருப்பை போட்டு வறுத்து பொடியாகி, அதனுடன் கலர் பவுடர், சர்க்கரைத்தூள் சேர்க்கவும்.

* ரோல் செய்த முந்திரி சப்பாத்தியின் மேல் இருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, அதன் மேல் பாதாம் பவுடரைத் தூவி, பாய் போல சுருட்டி, துண்டுகளாக வெட்டு சாப்பிடவும்.

* குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த முந்திரி – பாதாம் ரோல், சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும்.

Related posts

சிவப்பு அரிசி நட்ஸ் புட்டு

nathan

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

இறால் வடை

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan

ஒப்புட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

nathan

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

nathan