சிற்றுண்டி வகைகள்

பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி

பச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும். பச்சை பட்டாணி புலாவ் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும்.

பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – 1/2 கப்
கேரட் – 1
பச்சைமிளகாய் – 4
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 6 பல்
பெரிய வெங்காயம் – 2
பட்டை கிராம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் + நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

* கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு வெடித்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.

* அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.

* இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, அரிசி சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.

* சுவையான சத்தான பச்சை பட்டாணி புலாவ் ரெடி.

* இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.201607301045062290 How to make Green peas carrot pulao SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button