31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்

முருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்
தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 7
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2
தக்காளி – 1
முருங்கை இலை – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, மிளகு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பூண்டை நசுக்கி வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி, போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.

* கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

* இந்த சூப் மிகவும் சத்து நிறைந்தது. வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா சர்க்கரை வள்ளி கிழங்கு…..?

nathan

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சோம்பேறித்தனம் வருமா? உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா…பொய்யா?

nathan

உங்க முடி எலிவால் போன்று உள்ளதா? சில அற்புத வழிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நோயாளிகளின் உயிருக்கு எமனாகும் பிரட்!

nathan

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு மரவள்ளி கிழங்கு கூட்டு

nathan

ஆரோக்கியம் நிறைந்த அற்புத உணவு கூழ்

nathan

சத்து நிறைந்த வெரைட்டி கீரை சட்னி

nathan

இனி பூசணி விதைகளை தூக்கி எறியாதீங்க!

nathan