30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பூண்டு – 10 பற்கள் (பெரிய பல்லாக)
தேங்காய் விழுது – 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
நெய் – 2 தேக்கரண்டி
மிளகு -10
உப்பு – தேவைக்கேற்ப
முந்திரி – 10
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – 2
பட்டை – ஒரு துண்டு
பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
கொத்தமல்லி மற்றும் புதினா – சிறிது

செய்முறை :

* வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.

* பூண்டைத் தோலுரித்துக் கொள்ளவும்.

* குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, முந்திரி, பெருஞ்சீரகம், புதினா மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்த பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

* எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* கொதித்த பிறகு அரிசியைச் சேர்த்து உப்பு போட்டு வேகவிட்டு இறக்கவும்.

* சுவையான பூண்டு சாதம் தயார். கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

Related posts

இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி

nathan

சூப்பரான கேரட் சப்பாத்தி!

nathan

உங்களுக்கு தெரியுமா அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

nathan

உணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்!

nathan

இந்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இவ்வளவு அற்புதமான நன்மைகள் கிடைக்குமா!இதை படிங்க…

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

பீட்ரூட் புலாவ்

nathan

நீரிழிவு நோயின் எதிரி

nathan

எடையை வேகமாக குறைக்க சாப்பிடும் போது இத செஞ்சா போதும்!தெரிஞ்சிக்கங்க…

nathan