தேவையான பொருட்கள்:
* பிரட் – 3 துண்டுகள்
* பெரிய கேரட் – 1
* வெங்காயம் – 1
* பச்சை மிளகாய் – 1
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* புதினா – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1/2 டீஸ்பூன் (துருவியது)
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* அரிசி மாவு/சோள மாவு/மைதா – 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை சிறிதாக கையில் துண்டுகளாக்கி போட வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகள், துருவிய கேரட், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, சீரகம், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு/சோள மாவு/மைதா மாவை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பிசைந்ததை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான பிரட் வடை தயார்.