நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பச்சை மிளகாய்.
இது கலோரிகள் குறைவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவுப் பொருளும் கூட. கூடுதலாக, இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன.
தற்போது பச்சை மிளகாய் உட்கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பச்சை மிளகாயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா? | What Are The Benefits Of Consuming Green Chillies
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது. பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது.
கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது
உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்க உதவுகிறது.
மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளை குறைக்க உதவுகிறது .
மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது. கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படுகிறது.
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல பயனை கொடுக்கும்.
உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.