மருத்துவ குறிப்பு

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிவை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சில விஷயங்களை கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிவை
* குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்” என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும்.

அதற்குப் பதில் “நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்” என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும்.

* பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது.

* பிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும்.

* பிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

* பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

* குழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும்.

* பெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.

* பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது.

* பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* சக மாணவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டும்படி செய்ய வேண்டும்.201611301230137490 to teach For children going to school SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button