31.1 C
Chennai
Monday, May 20, 2024
diabetes 1520928535
ஆரோக்கியம் குறிப்புகள்

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டியவை..!தெரிந்துகொள்ளுங்கள் !

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் பராமரிக்க வேண்டியவை.

பாத பராமரிப்பு

* தினமும் உங்கள் பாதங்களை பரிசோதியுங்கள்.

* பாதங்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி மாய்ஸ்ர் ரைசிங் லோஷனைத்தடவுங்கள்.

* பாதங்களில் உணர்ச்சி குறைவாக இருந்தால் அதிகப்ப டியான சூட்டையும், அதிகப்படியான குளிர்ச்சியையும் தவிர்க்கவும். கால்களில் கச்சிதமாக பொருந்தும் ஷூக்கள், சாண்டல்கள் அணியவும். கட்டி, ஆணி போன்றவர்களுக்கு நிபுணரிடம் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

* கால் நகங்களை சரியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

* காலணி இல்லாமல் நடக்காதீர்கள். நீங்களே அறியாமல் காயம்பட்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

* உங்கள் பாதங்கள் அல்லது முன்னங்கால்களில் சிவப்பு, நீலம் அல்லது பழுப்பு புள்ளிகள் பாதத்தில் திடீர் வலி அல்லது கடுமையான வலி.

* பாதத்தில் காயம் இல்லாத போதும் ஒரு விதமான நாற்றம்.

* பாதம் அல்லது காலில் வீக்கம். * புண் வெடிப்பு கொப்புளம். கண் பராமரிப்பு

* திடீரென்று பார்வை இழந்தால் உடனே உங்கள் டாக்டருடன் தொடர்பு கொள்ளவும்.

* கண் நிபுணரை கலந்தா லோசிக்கவும். செயற்கை கண் மருத்துவரை அல்ல.

* உங்கள் கண் டாக்டரிடம் உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதையும் கூறவும். கண் சொட்டு மருந்தினால் ஊக்குவிடப்பட்டு கண்மணிப்பாப்பா மீது சோதனை மேற்கொள்ளபட வேண்டும்.

கண் பரிசோதிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்கு வாகனம் ஓட்ட வேண்டாம்.

* முறையாக ஆண்டுதோறும் கண்களைச் சோதித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கருவுற்றிருந் தால் மற்றும் நீரிழிவு நோயும் இருந்தால் முதல் மூன்று மாத காலத்தில் கண் டாக்டரை கலந்தாலோசிக்கவும்.

* புகை பிடிக்கக்கூடாது, மதுபானம் எடுத்துக்கொள்ளக் கூடாது. கவனிக்கவேண்டிய ஆபத்தான அறிகுறிகள்

* மங்களான பார்வை.

* கண்ணில் நிழல் போன்ற திரை.

* இரட்டைப் பார்வை.

* சிவந்த எரிச்சலுடன் கூடிய கண்கள்.

* மேகமூட்டப் பார்வை கண்களில் வலியுடன் கூடிய அழுத்தம்.

* பார்வை களத்தில் மிதக்கும் திட்டுகள்.

* கண் புரை. * விழி அழுத்தமிகைப்பு (க்ளைகோமா)

* விழித்திரை சிதைவு.

டாக்டர் பி.செல்வம் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்-News & image Credit: maalaimalar

Related posts

உங்களுக்கு தெரியுமா திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள் நினைக்கக்கூடிய பொதுவான 9 விஷயங்கள்

nathan

எடையைக் குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

வேர்க்கடலை. ஏழைகளின் அசைவ உணவு!

nathan

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

நகங்களில் இந்த மாற்றங்கள் இருப்பின் மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார் என முடிவு எடுக்கலாம்!

nathan

எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ?

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி?

nathan

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தை நன்றாக தூங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுங்க..!

nathan