31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
​பொதுவானவை

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மக்காச்சோளம் – ஒரு கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டு பல் – தலா 2,
சோம்பு – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

* மக்காச் சோளத்தை 8 மணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் வேக வைக்கவும்.

* அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெந்த சோளம், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து, தண்ணீர் சிறிது தெளித்து நன்கு கிளறி விடவும்.

* 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

* சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் ரெடி.

Related posts

இஞ்சி தயிர் பச்சடி

nathan

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்

nathan

சூப்பரான பன்னீர் கார்ன் குருமா

nathan

உடலுக்கு வலுவான சாமை – தேங்காய் பால் உளுத்தங்கஞ்சி

nathan

குளிர்ச்சியான வெள்ளரிக்காய் பச்சடி / ரைத்தா

nathan

சூப்பரான பூசணிக்காய் கறி

nathan

சுவையான வெண்டைக்காய் சாம்பார்

nathan

நீங்கள் இல்லத்தரசியா? உங்களுக்கான பயனுள்ள தகவல்கள்

nathan