33.3 C
Chennai
Saturday, May 18, 2024
2d6850b
ஆரோக்கிய உணவு

மாப்பிள்ளை சம்பா சாதம் சாப்பிட்டால் ஆண்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!தெரிந்துகொள்வோமா?

பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோல் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது.

அதில் ஒன்று மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள், இதனால் நமக்கும் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

நம் முன்னோர்கள் இதற்கு அதனால் தான் மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஏன் என்றால் ஆண்மையை அதிகரித்து, உடலுக்கு பலம் கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன?

 

இதனால் தான் நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்தனர். சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது.

இத்தனை சத்துக்களை கொண்ட மாப்பிள்ளை சம்பாவில் சாம்பார் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2022: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பரிகாரங்கள்….பணக்கார யோகம் யாருக்கு?

 

மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி – 2 கப்
காய்கறிகள் -400 கிராம்
துவரம்பருப்பு -150 கிராம்
மஞ்சள் தூள் -2 சிட்டிகை
கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் -அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -3
தக்காளி -2
சின்ன வெங்காயம் -100 கிராம்
பூண்டு -20 பல்
சாம்பார்பொடி -3 மேசைக்கரண்டி
, புளி-ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
கொத்துமல்லி- சிறிது.

செய்முறை
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும். குக்கரில் மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின் வேக வைத்த துவரம் பருப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழைய வேகவிடவும்.

பின் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும். வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். சுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் ரெடி.

Related posts

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

ஹைதராபாத் கோழி வறுவல் செய்முறை!

nathan

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

nathan

இந்த 10 உணவுகளுடன் எளிதாகத் தவிர்க்கலாம் முழங்கால் மூட்டுவலி..!

nathan

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika

தெரிஞ்சிக்கங்க… ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

nathan

ஆண்களுக்கு உரமூட்டும் 6 உணவுகள்!

nathan

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

nathan

இஞ்சியை தினமும் வெறும் வயிற்றில் ஏன் சாப்பிட சொல்லுறாங்கனு தெரியுமா..?

nathan