32 C
Chennai
Saturday, Jul 19, 2025
Thuvaiyal Inji thogayal ginger chutney SECVPF
ஆரோக்கிய உணவு

சத்தான துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

இஞ்சி – 100 கிராம்

உளுத்தம் பருப்பு – 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
துருவிய தேங்காய் – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.

இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.

அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

Related posts

சூப்பரான பசலைக்கீரை பாஸ்தா ரெசிபி

nathan

அஸ்பாரகஸ் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

nathan

அதிக அளவிலான நார்ச்சத்து எலுமிச்சை தோலில் செறிந்துள்ளதால் அல்சர் மற்றும் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

nathan

முடி உதிர்வுக்கு குட்பை… அசத்தல் நெல்லிக்காய்!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சாப்பிடும் போது கடைப்பிடிக்க வேண்டியவைகள்!!!

nathan

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

nathan

30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்

nathan

நீங்கள் அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan