31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் அதிகமாக குளிர்பானங்களை பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பொதுவாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் சோடா பானங்கள் மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை பருகி வருவதால் உடலில் பல விதமான பிரச்சினைகள் ஏற்படும்.

இதனால், பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானங்கள் மற்றும் அது தொடர்புடைய பழ சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் 16 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு 81,714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். 12 ஆண்டுகளாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், உடல் பருமமான பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற பெண்களை விட அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இருமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும் பருகக்கூடாது. கலோரிகள் அல்லாத பானங்களை பருகுவதே நல்லது.

Related posts

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

இப்படி இருந்தால்தான் அது நல்ல இறைச்சி…

nathan

தினமும் இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்! காய்கறிகளின் மருத்துவ குணங்கள்!!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

பாலுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பிரீசரில் இந்த பொருட்களை எல்லாம் வைத்த உடலுக்கு பேராபத்தையே ஏற்படுத்துமாம்?..

nathan

நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்

nathan