ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் ஆரம்பமாகப் போகிறது. இந்த பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இந்த பேரிக்காய் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆகவே இதனை சீசன் போதே வாங்கி சாப்பிடுங்கள். பேரிக்காய் பல நிறங்களில் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் பச்சை நிற பேரிக்காய் வகை தான் கிடைக்கும்.
பேரிக்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் இநத் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து கூட பேரிக்காயில் அதிகம் உள்ளது. இப்போது இத்தகைய சத்துக்கள் நிறைந்த பேரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்…
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
பேரிக்காயில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே இதனை உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், அதனைக் கட்டுப்படுத்தலாம்.
காய்ச்சல்
பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று தான் இது. உங்களுக்கு காய்ச்சல் இருக்கும் போது, இதனை உட்கொண்டு வந்தால், காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடலுக்கு நல்லது
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால் குடல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
புற்றுநோய்
பேரிக்காயில் காப்பர் மற்றும் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது. எனவே பேரிக்காய் சீசன் போது பேரிக்காயை உட்கொண்டு வந்தால், சூரியனின் புறஊதாக்கதிர்களால் செல்கள் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.
ஆற்றலை அதிகரிக்கும்
உடல் மிகவும் சோர்வுடன், ஆற்றல் இல்லாதது போல் உணரும் போது, பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள குளுக்கோஸ், உடலுக்கு ஆற்றலைத் தரும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் உள்ளவர்கள், பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.
வீக்கத்தைக் குறைக்கும்
நாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் இருப்பவர்கள், பேரிக்காய் அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்.
உயர் இரத்த அழுத்தம்
பேரிக்காயில் உள்ள குளுட்டோதியோனைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி
பேரிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.