23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
3 155177
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் பற்றி பார்ப்போம்.

காலிபிளவர்

முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்த காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். காலிபிளவரை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த காய்கறிகளில் வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாக கரையும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட்

பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள். பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.

காளான்கள்

வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது. இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காளான்களை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

கேரட்

கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.

Courtesy: MalaiMalar

Related posts

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

nathan

முந்திரி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

எலுமிச்சை ஜூஸில் பப்பாளி விதையை கலந்து குடித்தால் இந்த நோய்கள் எல்லாம் குணமாகும்.சூப்பர் டிப்ஸ்..

nathan

ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அருமருந்து.!!வாழைப்பூவில் உள்ள மகத்துவங்கள்.!

nathan

பல்வேறு சத்துக்கள் வாழைக்காயில்அடங்கியுள்ளது!…

sangika

வாரத்துக்கு ஒரு முறை இஞ்சி சாறு குடிங்க…பாரம்பரிய மருத்துவ முறை..

nathan

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய…!

nathan