32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் பற்றி பார்ப்போம்.

காலிபிளவர்

முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்த காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். காலிபிளவரை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த காய்கறிகளில் வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாக கரையும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட்

பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள். பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.

காளான்கள்

வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது. இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காளான்களை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

கேரட்

கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும். அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.

Courtesy: MalaiMalar

Related posts

மருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

மூளைக்கு வலுவை தரும் பலாக்காய் கூட்டு

nathan

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்

nathan

அதிக அளவிலான நார்ச்சத்து எலுமிச்சை தோலில் செறிந்துள்ளதால் அல்சர் மற்றும் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 5 முக்கிய கடல் உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான மட்டன் கீமா கட்லெட்

nathan

நின்னுக்கிட்டே சாப்பிட்டா என்னென்ன ஆபத்து! மோசமான குறைபாட்டை சந்திக்கலாம்.

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan