36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

பேரிச்சம் பழத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு இது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள், வெள்ளை போக்கிற்கு கூட சிறந்த தீர்வளிக்க கூடியது பேரிச்சம்பழம் என கூறப்படுகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்தும், கால்சியமும் உடல் வலிமையை நன்கு ஊக்குவிக்கிறது.

இனி, தினமும் உங்கள் டயட்டில் அல்லது உணவில் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…

உடனுக்குடன் உடல் சக்தி க்ளுகோஸ், ஃபிரக்டோஸ், சக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிக்கும் ஒல்லியாக இருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன.

எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.

செரிமானம் சரியாகும் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.

சருமத்திற்கு நல்லது பேரிச்சம்பழத்தில் நிறைய வைட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

இரத்த சோகைக்கு தீர்வ
ு பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, வைட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

nathan

வாழ்நாள் முழுவதும் நீரிழிவு, சிறுநீரக நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் இயற்கை உணவுகள் !

nathan

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்

nathan

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

ஏன் காலை 9 மணிக்கு முன் எப்போதுமே காபி குடிக்கக் கூடாது?

nathan

தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வதோடு, உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்தால், உங்கள் உடல் எடையை நிச்சயமாக குறைக்க முடியும்.

nathan