27.7 C
Chennai
Saturday, May 17, 2025
Tamil News Tips to Reduce Belching or Burping SECVPF
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்

உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக

வெளியேறும்.

அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.

அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால்,

அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

இதோ அதனை சரிசெய்வதற்கான டிப்ஸ்

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம்

நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால்,

அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும்

குணமாகும்.

இதில் ஏதாவது ஒற்றை தினமும் பின்பற்றி வந்தால் ஏப்பம் வரும் போது மற்றவர் எதிர் அசிங்கப்படாமல் தப்பிக்கலாம்.

Related posts

இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது….

nathan

பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?

nathan

இந்த 6 ராசி பெண்கள் மோசமான மனைவிகளாக இருப்பாங்களாம்…

nathan

கொசுவர்த்திகளும் வாசனை திரவியங்களும் தவிர்க்க முடியாத நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும்?….

sangika

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

nathan

தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்பவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கீரை மட்டும் போதும்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கைப்பையில் வைத்திருக்க வேண்டிய 10 பொருட்கள்!!!

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika