31.1 C
Chennai
Monday, May 20, 2024
30397577c0635d62e3a310ed10b68c361597778b 622875669
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளை உயரமாக்கும் உணவுகள் இது தான்!

உடல் எடைக்கு அடுத்ததாக உயரத்தை எண்ணித் தான் பலர் வருத்தப்படுகின்றனர். அதிலும் குழந்தைகள் வளரவில்லை என்றால் தாய்மார்களின் மனம் பாடாய்ப் பட்டுவிடும். தன் குழந்தையை குள்ளமாக இருப்பதை இந்த உலகம் எள்ளி நகையாடினால், நம்முடைய குழந்தை என்ன செய்வான் எனத் தினம் தினம் நொந்து போவார்கள்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு மரபணுக்கள் காரணமாக இருந்தாலும் கூட சுற்றுச்சூழலும் குழந்தைகளின் வளர்ச்சி விகிதத்தை பாதிக்கிறது. உதாரணமாக ஜப்பானில் குண்டுவெடிப்பிற்கு பிறகு குழந்தைகளின் வளர்ச்சி மிக மோசமாக பாதிப்படைந்திருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் சரிசெய்வதன் மூலம் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.

30397577c0635d62e3a310ed10b68c361597778b 622875669

புரதச்சத்து நிறைந்துள்ள முட்டையை தினசரி உணவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். முட்டையிலுள்ள வெள்ளைக் கரு செறிவூட்டப்பட்ட புரதத்தின் மூலமாகும்.பால் சார்ந்த பொருட்களில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியமும், வைட்டமின்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன உங்கள் குழந்தைகள் பாலைக் குடிக்க மறுத்தாலும் பால் சார்ந்த உணவுகளைத் தயார் செய்துக் கொடுங்கள்.

கோழி இறைச்சியில் புரதம் அடங்கிய வைட்டமின்-பி மற்றும் பி6, தியாமின் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முட்டைக் கோஸ், காலே, ப்ரோக் கோலி போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகிறது. எலும்புகளின் மறு உருவாக்கம் மற்றும் தாதுக்களில் படிந்து புதிய திசுக்களை உருவாக்குவதற்கும் இந்த காய்கறிகள் பயன்படுகின்றன.
இரும்புச் சத்து அதிகமாக உள்ள கீரையை அடிக்கடி உங்கள் குழந்தைக்கு வழங்க வேண்டும்.

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. குழந்தைகள் கேரட்டை எடுத்துக் கொண்ட பிறகு அது வைட்டமின் ஏ- ஆக பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது எலும்புகளைப் பாதுகாக்கப் பயன்படுகிறது.பழங்களில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. ஒன்று முதல் இரண்டு பழங்களை தினந்தோறும் உங்கள் குழந்தைகளுக்கு வழங்குங்கள். முழுதானியங்களை சேர்த்துக் கொள்ளும் போது கனிமச் சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. இது எலும்பு வளர்சிக்கு மட்டுமல்லாமல் உடல் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

Newstm.in

Related posts

தெரிஞ்சிக்கங்க… நம்மோடு தினமும் உறவாடும் விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள்!

nathan

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? உறவில் அன்யோன்யம் அதிகரிக்க…

nathan

நீங்கள் வாங்கும் முட்டை காலாவதியானதா…

nathan

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

nathan

9 வீட்டுடைமை நெருக்கடிகளை உப்பை கொண்டு சமாளிக்கலாம்

nathan

இத படிங்க..மீண்டும் மீண்டும் ஒரே பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்த வேண்டாம்!!

nathan

சில்லி பேபி கார்ன்

nathan

இதை முயன்று பாருங்கள் உடல் எடையை குறைக்கும் டிராகன் பழம்

nathan

இத பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்!

nathan