27.6 C
Chennai
Tuesday, Aug 12, 2025
1 chillibabycorn
ஆரோக்கியம் குறிப்புகள்

சில்லி பேபி கார்ன்

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிப்பதற்கு…

* பேபி கார்ன் – 15

* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

பிற பொருட்கள்…

* ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)

* பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

* சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி, பேபி கார்னை சேர்த்து 5 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின் அதை எடுத்து சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பேபி கார்ன் துண்டுகளை மைதா பேஸ்ட்டில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Chilli Baby Corn Recipe In Tamil
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதன் பின் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் பொரித்த பேபி கார்னை சேர்த்து, அத்துடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சில்லி பேபி கார்ன் தயார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் உஷ்ணத்தை தணித்து, குடல் புண்களை ஆற்றும் நெய்

nathan

ஜாக் கிரதை! உள்ளாடையில் இந்த சிறிய தவறை செய்கிறீர்களா?

nathan

நீங்க நல்ல பெஸ்ட் ஹஸ்பெண்ட்டா? 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா?

nathan

வீட்டில் பீட்ரூட்டை வளர்க்கும் முறை!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வெண்புள்ளி உணவு முறை

nathan

சீக்கிரமாக கர்ப்பமடைவது எப்படி?பெண்களுக்கான சில ஆலோசனைகள்..!

nathan

nathan

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

nathan

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்?

nathan