மருத்துவ குறிப்பு

இதை பின்பற்றுங்கள்! மூளையின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க வேண்டுமா?..

ஆல்கஹால் மூளைக்கு நச்சுத்தன்மை விளைவிக்கக்கூடியது. அதை அதிகமாக உட்கொள்வது மூளை செல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவை மூளையில் கொழுப்பு படிவதை தடுக்க உதவும்.

கொழுப்பு உணவுகளுக்கு பதிலாக வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அவை முதுமையை தள்ளிப்போடும் தன்மை கொண்டது.

போதை மருந்துகளின் பயன்பாடு மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதனை அறவே தவிர்க்க வேண்டும்.

போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்.

தினமும் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகை செய்யும். முதுமையை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

நினைவாற்றல் இழப்புக்கு மன அழுத்தம் முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடுவது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button