ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…காதல் தோல்வியில் இருந்து விடுபடுவது எப்படி?

காதல் தோல்வியில் விடுபடுவது என்பது இலகுவான விடயம் அல்ல. அந்த பிரிவு நமது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும்.

அதில் இருந்து விடுபடுவது எப்படி?

  • ஒருவரின் சிந்தனை இருந்தால், எதிலுமே கவனம் செலுத்த முடியாது.
  • மனம் அலைப்பாய்ந்து கொண்டிருக்கும்.
  • உயிரினும் மேலாக நேசித்தவர்களின் பிரிவு வெறுமையை ஏற்படுத்தும்.
  • அவருக்கான இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
  • இந்த வாழ்க்கை முடிந்து விட்டது என்றே தோன்றும்.
  • இந்த உணர்வு பெரும் இரணத்தை தரும்.

முதலில்,

  • பிரிவிற்கான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
  • அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அடைய வேண்டும்.
  • சிறிது கால அவகாசம் தேவைப்படும்.
  • நிதானமாக சிந்திக்க வேண்டும்.

துயரில்லாத பிரிவில்லை அதனால் அதனை கடக்க என்ன செய்யலாம்?

முதல் வழி

  • உறவை பற்றியும், வேதனை பற்றியும் பிறரிடம் பேசுவதால் பயன் இல்லை.
  • மேலும் உங்களை பலவீனமாக்கும்.
  • பிரிவுக்கு பின்னான காரணங்கள் என்ன? என்று யோசியுங்கள்.
  • இந்த முடிவு சரியானதா இல்லையா? என்று யோசியுங்கள்.
  • உடைந்து போகும் நேரத்தில் உங்களிடம் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்.
  • மனதை ஆற்றுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
  • உங்கள் நண்பர்களிடத்தில், பேசுங்கள்
  • உங்கள் உறவை பற்றி கண்ணோட்டம் என்ன என அறிந்து கொள்ளுங்கள்.
  • எது உங்களுக்கு சரியானதாக கருதுகிறார்கள் என்பதை நண்பர்களிடம் கேளுங்கள்
  • இந்த ஆலோசனை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
  • மேலும், உங்களுக்கு ஒரு தெளிவை பிறப்பித்து கொள்ளும்
  • அந்த துயரில் இருந்து மீண்டு வர உதவி செய்யும்.

 

இரண்டாவது முறை

  • பெரும்பகுதியை உங்கள் துணையுடன் இருந்தே வீணாகியிருக்கும்.
  • உணவு, உறக்கம், வேலை, நண்பர்கள் என எல்லாவற்றையும் மறந்திருப்பீர்கள்.
  • காதலில் மிதந்து கொண்டிருந்திருப்பீர்கள்.
  • காதலின் பிரிவுக்கு பின், தற்போது உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.
  • அவற்றை நீங்கள் மிகவும் பயனுள்ளதாக்குங்கள்.
  • வாசிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.
  • நடனம், விளையாட்டு, இசையில் கவனத்தை முழுமையாக செலுத்துங்கள்.
  • ஆற்றல் முழுவதையும் கற்றலில் பயன்படுத்துங்கள்.
  • உற்சாகமூட்டும் செயல்களை செய்ய தவற வேண்டாம்.

மூன்றாவது முறை

  • நண்பர்கள், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்
  • நண்பர்கள், குடும்பத்தினருடனான நேரங்களை இழந்திருக்கக்கூடும்.
  • அவற்றை மீட்டெடுக்க இந்த பிரிவை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • உங்களை நேசிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
  • உங்கள் மனநிலை முன்னேற்றம் அடையும்.
  • அவர்களும் மகிழ்ந்திருப்பார்கள்.
  • உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றலாம்.
  • காதல் தோல்வி என்றால், ஒரே இடத்தில் படுத்து, கொள்ள வேண்டாம்.
  • ஏதோ சிந்தனைகளை அசைப்போட்டு கொண்டிருக்க வேண்டாம்.
  • உங்களை மகிழ்விப்பவை அனைத்திலும் ஈடுபடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button