இன்று நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகிவிட்டது அசைவம். ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் வித விதமாக சமைத்து உண்கிறோம். அசைவ உணவு சில நேரங்களில் சரியாக ஜீரணம் ஆகாமல் நம்மை அவதிப்பட வைக்கும்.
அதேபோல அசைவ உணவு சாப்பிடும்போது ஒருவிதமான உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் ஆபத்து என்கிறது மருத்துவம்.
அசைவம் + தேன்:
மறந்தும்கூட தேனுடன் அசைவ உணவை சேர்ந்து சாப்பிடாதீர்கள். இந்த கலவைக்கு பெயர் ஆம விஷம் என்கின்றனர். அதாவது, தேனுடன் அசைவதை சேர்க்கும்போது தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அசைவம் + கீரை:
இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும்.
இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
அசைவம் + முள்ளங்கி:
முள்ளங்கியை வேகவைத்து அதனுடன் அசைவதை சேர்த்து சாப்பிடுவது மிகவும் ஆபத்தான ஓன்று. இவை இரண்டிலும் உள்ள புரதம் உற்பத்தியாகும் இரத்தத்தை விஷமாக மாற்றும் தன்மை கொண்டதாம்.
அசைவம் + உளுந்து:
கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை
அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு,
குமட்டல், வாந்தி, படபடப்பு போன்றவை உண்டாகும்.