27.6 C
Chennai
Tuesday, Mar 18, 2025
badluck 1632141690
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த பொருட்களை வீட்ல வெச்சுருக்காதீங்க… தெரிந்துகொள்ளுங்கள் !

வாஸ்து சாஸ்திரத்தின் படி, எல்லாவற்றிற்கும் அதன் சொந்த ஆற்றல் உள்ளது. அதாவது, ஒவ்வொன்றும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளைக் கொண்டுள்ளது. பல நேரங்களில் நம் வீட்டில் இதுப்போன்ற பல விஷயங்கள் உள்ளன. அதில் சில வீட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் அவற்றின் மீது நாம் மிக குறைந்த அளவிலேயே கவனம் செலுத்துவோம். சொல்லப்போனால், ஒருவரது வீட்டில் பல முக்கியமான விஷயங்கள் நடைபெறாமல் போவதற்கு காரணமாகவும் இவை விளங்குகின்றன.

Don’t Keep These Things In Your House Otherwise Only Bad Will Happen
உண்மையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த விஷயங்கள் அனைத்தும் தான் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகின்றன. ஆனால் பெண்கள் வீட்டில் உள்ள பொருட்களின் மீது எவ்வித சேதமும் ஏற்படாமல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நம் வீட்டில் உள்ள பல பொருட்கள் எதிர்மறை ஆற்றலை விட்டுச் செல்லக்கூடியவை. இப்போது அந்த பொருட்கள் எவையென்பதைக் காண்போம். அந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இம்மாதிரியான போட்டோக்களை அகற்றவும்
இம்மாதிரியான போட்டோக்களை அகற்றவும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கப்பல் மூழ்குவது போன்ற போட்டோக்களை வைக்கக்கூடாது. ஏனெனில், இது எதிர்மறை ஆற்றலை வீட்டில் வழங்கும். எனவே எதிர்மறை ஆற்றலை வரவேற்கும்படியான போட்டோக்களை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைக்காதீர்கள். இதுப்போன்ற போட்டோக்களைப் பார்க்கும் போது, அது எதிர்மறை எண்ணங்களை மனதில் உண்டாக்கும்.

மருந்துகள்
மருந்துகள்
தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், ஒவ்வொருவரின் வீட்டிலும் சில மருந்துகள் கட்டாயம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் நாம் பயன்படுத்தாத மருந்துகளைக் கூட நாம் வீட்டில் சேகரித்து வைத்திருப்போம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பயனற்ற மருந்து இருக்கக்கூடாது. ஏனெனில், அது வீட்டில் நோயை அழைக்கிறது.

உடைந்த பொருட்கள்
உடைந்த பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, முகம் சிதைந்த அல்லது உடைந்த நிலையிலான சிலைகள், உடைந்த கண்ணாடி பொருட்கள் என எதையும் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இது அபசகுனமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அது குடும்பத்தில் சண்டையை அதிகரிக்கும்.

அழுக்கு நிறைந்த வீடு
அழுக்கு நிறைந்த வீடு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அழுக்கு/குப்பை நிறைந்த வீட்டில் லட்சுமி தங்குவதில்லை. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவு நேர்மறை ஆற்றல் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவிக்கு சுத்தம் தான் பிடிக்கும். எந்த வீட்டில் குப்பை அதிகம் இருக்கிறதோ, அங்கு லட்சுமி தேவியும் இருக்கமாட்டாள், நேர்மறை ஆற்றலும் இருக்காது.

இருள் நிறைந்த வீடு
இருள் நிறைந்த வீடு
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மாலை வேளையில் வீட்டிற்கு விளக்கேற்ற வேண்டும். ஒருபோதும் வீட்டை இருள் நிறைந்து வைத்திருக்கக்கூடாது. ஒருவரது வீட்டில் எவ்வளவு வெளிச்சம் இருக்கிறதோ, அவ்வளவு நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் அதிகமாக உயிரிழப்பதற்கு இவை தான் காரணமாக இருக்கிறதாம்!!!

nathan

உணவு சாப்பிட்ட பின் கட்டாயம் செய்யக்கூடாதவை

nathan

நீங்கள் சரியான அளவிலான நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?

nathan

தொற்று நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

nathan

கருச்சிதைப்பைத் தொடர்ந்து ஏற்படும் அபாய அறிகுறிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களது ராசிப்படி உங்களுக்கு எதில் பயம் அதிகம் தெரியுமா?

nathan

முயன்று பாருங்கள் பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு எப்படி !!

nathan