ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் வேகவைத்த நீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

எலுமிச்சைச் சாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் நன்மைகளை பற்றி அறிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி போடமாட்டோம்.

செய்முறை: எலுமிச்சை – 6, தண்ணீர் – 1/2 லிட்டர், தேன் – தேவையான அளவு.

தயாரிக்கும் முறை: முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

78264327a358b1a6018406348d378242de70ae7c 1353240000

இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது.

மேலும் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.

தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button