சாப்பிட்டவுடன் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வீக்கம் போன்றவை மிகவும் மோசமான அனுபவங்களாகும்.
இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணம் நமது மாறிவிட்ட வாழ்க்கைமுறைதான். எதையாவது சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு வீங்கியிருப்பதை நீங்கள் உணரும்போது வீக்கம் ஏற்படுகிறது.
இதனால் கடுமையான வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். வயிற்றில் வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? அதனை வெளியேற்றுவது எப்படி?
வீக்கம்
வயிற்றில் வீக்கம் ஏன் ஏற்படுகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். வயிற்றில் வீக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக அதிகமாக சாப்பிடுவது, தாமதமாக சாப்பிடுவது, அத்தியமாகி தூங்குவது போன்றவை வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த பட்டியலில் உப்பையும் சேர்த்து கொள்ளுங்கள்.
உடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? அதனை வெளியேற்றுவது எப்படி?
உப்பு
உங்கள் உணவுகளில் சோடியத்தை அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம் உங்கள் உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை குறைப்பதோடு வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இப்போது நாம் உப்பு அதிகமுள்ள உணவுகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வது உங்கள் உணவில் சோடியத்தின் அளவை அதிகரிக்கும்.
உடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? அதனை வெளியேற்றுவது எப்படி?
உப்பினால் நல்லதா?
அதிகளவு சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இது உயர் அழுத்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடலில் நீர் சமநிலையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நமக்கு சிறிது உப்பு தேவை அதனால் உப்பை முழுவதுமாக குறைப்பது நல்லதல்ல.
உடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? அதனை வெளியேற்றுவது எப்படி?
உப்பினால் ஏற்படும் பாதிப்புகள்
அதிக உப்பு எடுத்து கொள்வதால் வீக்கம் மட்டும் ஏற்படுவதில்லை, மேலும் பல பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், மேலும் இதனால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிகளவு உப்பு சாப்பிடும்போது அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மேலும் உங்கள் இதய ஆரோக்கியத்தின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். உப்பை முழுமையாக உணவில் இருந்து குறைப்பது முடியாத காரியம் ஏனெனில் உப்பு இல்லாத உணவில் சுவை என்பதே இருக்காது. உப்பின் அளவை குறைக்கலாமே தவிர நிறுத்தக்கூடாது.
உடலில் இருக்கும் அதிக உப்புச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா? அதனை வெளியேற்றுவது எப்படி?
எப்படி சரி செய்யலாம்?
அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் வீக்கத்தை நீங்களே சரி பண்ணலாம். அதிக தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் அதிகளவு சோடியத்தை வெளியேற்ற உதவும். மேலும் பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளான வாழைப்பழம், யோகர்ட், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் உங்கள் உடலில் இருக்கும் சோடியத்தை வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும். சோடியத்தின் அளவை குறைக்கும் மற்றொரு வழி இனிப்பை சேர்த்து கொள்வதாகும்.