31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்மை குறைபாட்டினை நீக்கும் பூசணி!…

தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மருந்தை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும்.

பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மையை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

ஆலம்பழம் பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்து கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலட்டு தனமை நீங்கும்.

Related posts

குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றி கட்டாயமாக கற்றுக் கொடுங்க…!

nathan

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

sangika

உங்க ராசிப்படி நீங்க பண விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

வாஸ்து படி, இதை உங்கள் படுக்கையறையில் செய்யுங்கள்- மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

nathan

மண்பானையில் நீங்க சமைச்சா… இந்த அதிசயம் நடக்குமாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமா???

nathan

எக்ஸாம் வந்தாலே மண்டை குடையுதா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ பலன்கள்!!

nathan