ஆரோக்கியம் குறிப்புகள்

காலில் தங்க கொலுசு போடக்கூடாது – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

உலகிலேயே தங்க நுகர்வு இந்தியாவில்தான் உள்ளது. தங்கத்தை அழகுக்காக மட்டுமல்ல முதலீட்டிற்காகவும் பெண்கள் வாங்குகின்றனர். தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள். தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது.

நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மிக தெளிவாக காட்டியுள்ளார்கள். தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன. தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதால் நமக்கு மனபலம் உண்டாகும்.

மகாலட்சுமி மிகவும் விரும்பி தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று.எனவேதான் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். தங்கத்தை லஷ்மியை போன்று பார்க்கும் காரணத்தால் தான் தங்கத்தை காலில் அணிவதற்கு அன்றைய காலத்து மக்கள் விரும்பவில்லை. மேலும் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.

தங்க நகை

 

தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருவதாக சான்றோர்கள் சொல்லி உள்ளனர். காதில் தங்கம் இருந்தால் கழுத்து நரம்பு வலுவாக இருக்கும்.

தங்க மோதிரம்

 

தங்கம் தன்னம்பிக்கை தரக்கூடிய உலோகம். அதனால்தான் ஒரு சின்ன மோதிரமாவது விரலில் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். மோதிர விரலில் தங்கம் இருந்தால் கருப்பையும், விந்துவும் வலுவடையும்.

அழகு ஆரோக்கியம்

ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தங்க தாலி

 

தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும், உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஒட்டி கிடப்பதால் நமக்கு மனபலம் உண்டாகும். தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள்.

நோய்கள் வராமல்

 

காக்கும் நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் என்று இல்லாமல் முத்து, வெள்ளி போன்றவற்றிலும் அணியலாம். நமது நாட்டின் பாரம்பரியத்தில் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது. நமது ஆரோக்கியத்தை முன் வைத்தே நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மிக தெளிவாக காட்டியுள்ளார்கள்.

காலில் வெள்ளி அணியலாம்

 

காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது என மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வந்தார்கள். இதுவே, காலில் தங்கம் அணியாததன் ரகசியம் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button