33.6 C
Chennai
Thursday, Jun 5, 2025
dress
அலங்காரம்ஆரோக்கியம்

கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை!…

சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும்.

கோடைகாலத்தில் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள்

கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி.

அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும்.

dress

உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.

ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும்.

சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?

ஹாட் பேன்ட்:

கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேண்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.

பருத்தி சேலைகள்:

பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

நீளமான பாவாடைகள்:

அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

லூசான பேன்ட் :

இப்போதெல்லாம் லூசான பேண்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்

பருத்தி ஆடைகள்:

வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

சல்வார் கமீஸ்:

சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

குட்டையான ஆடைகள்:

கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.

காதி:

கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.

Related posts

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க உதவும் செயலி!…

sangika

நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

கோடையில் உடல் எடையைக் குறைக்க ஜிம் செல்பவராக இருந்தால் இத படிங்க…

sangika

ர்க்கரை வள்ளிக்கிழங்கில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம்…

nathan

ஆடை அழகாக அணிவது மட்டும் முக்கியமல்ல நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது ரொம்ப அவசியமானது!….

sangika

டலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும். காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

nathan