family
வீட்டுக்குறிப்புக்கள்ஆரோக்கியம்

குடும்ப தலைவிகளுக்கு சிறந்த ஆலோசனைகள்!…

சாறு பிழிந்த எலுமிச்சம்பழத் தோலைத் தூக்கி எறிந்துவிடாமல் உருளைக்கிழங்கு வேகவைக்கும்போது அதோடு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.

முருங்கைக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைக்க ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

கீரையை வேகவிடும்போது, சிறிது எண்ணெய்யை அதனுடன் சேர்த்து வேகவைத்தால், கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது, அத்துடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்துச் செய்தால், சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.

family

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறைத் தெளிக்கவும்.

வாழைப் பூவை நறுக்கிச் சுத்தம் செய்வதே பெரிய வேலை, இதோ ஓர் எளிய முறை…. பூவை ஆய்ந்ததும் முழுசாக மிக்ஸியில் போட்டு இரண்டே சுற்று சுற்றினால் போதும் ஒரே அளவில் பூவாக உதிரும்.

பிடிகருணையை வேகவைக்கும்போது சில கொய்யா இலைகளையும் சேர்த்து வேகவைத்தால் சிறுதுகூட காரல் இருக்காது.

சிறிது சர்க்கரை கலந்த நீரில், கீரையை ஊறவைத்து பிறகு சமையல் செய்து சாப்பிடுங்கள். கீரை தனிச் சுவையாக இருக்கும்.

வெங்காயம், பூண்டு, பலாக்கொட்டை ஆகியவற்றை சுலபமாக உரிக்க கைகளில் இரண்டு மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு நன்றாக அவற்றை தேய்த்து வைத்து விடுங்கள். மறுநாள் உரிக்க ஒரு நிமிடம்கூட ஆகாது.

Related posts

இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்!….

sangika

8 வகையான கொழுப்பை எரிக்கும் உணவுகள் உங்கள் எடையை இழக்க உதவுகிறது

nathan

பெண்களுக்கான சில குறிப்புகள்

nathan

உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ள 5 வழிகள்:

nathan

வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

nathan

கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகின்றதாம்!..

sangika

சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!

sangika

உங்களது குழந்தையின் தோல் நிறத்தை சிவப்பாக மாற்றுவதற்கு இந்த 10 எளிய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

nathan