ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? கட்டாயம் இத வாசியுங்கள்!…

உட்கார்ந்தே வேலை செய்யும் போது, மூளை அதிகம் வேலை செய்கிறது. உடலுழைப்பு அதித அளவிற்கு இருப்பதில்லை. இதனால், நீரிழிவு, உடல் பருமன் உட்பட, பல்வேறு உடல் பிரச்னைகள் வருகின்றன என்பது நமக்கெல்லாம் தெரிந்த பொதுவான உண்மை.

ஆனால், பல மணி நேரம் அமர்ந்தே வேலை செய்தால், அதிக அழுத்தத்திற்கு உள்ளாவது, நம்முடைய முதுகுத் தண்டு என்பது பெரும்பாலும் தெரியாத உண்மை…

படுத்திருக்கும் சமயங்களில் கூட, முதுகுத் தண்டு மிகக் குறைந்தபட்ச அழுத்தத்திற்கு உட்படும். அதிலும் கார், பைக் ஓட்டும் சமயங்களில், அதிர்வுகளோடு அமர்ந்திருப்போம்.

அதனால், இன்னும் அதிக அழுத்தத்தில் இருக்கும். எழுந்து நேராக நிற்கும் சமயங்களில் படுத்திருப்பதைக் விடவும், குறைந்தபட்ச அழுத்தம் இருக்கும், என்பதால், முதுகுத் தண்டு, ‘அப்பாடா’ என்று ரிலாக்சாக இருக்கும்.

computer work

ஏன் ஏற்படுகிறது?

டி – ஜெனரேஷன் எனப்படும் டிஸ்கில் ஏற்படும் தேய்மானத்தால், இந்தப் பிரச்னை வருகிறது. 50 – 60 வயதில் முடி நரைக்க துவங்கும். வெயில், அதிக மாசு உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கு, 20 வயதிலேயே முடி நரைப்பது, தோல் சுருங்கி விடுவது நடக்கும். காரணம், முடியில் ரத்த நாளங்கள கிடையாது. அதைப் போல, மூட்டுகளில் உள்ள டிஸ்கில், ரத்த நாளங்கள் இல்லை.

ரத்த நாளங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள செல்கள் விரைவில் அழிவது நடக்கும். இதற்கான ஊட்டச்சத்து, அருகில் உள்ள செல்கள், எலும்புகளில் இருந்து கிடைக்கிறது.
தசைகளின் வலிமை அதிகரித்தால், எலும்புகளுக்கு அதிக அழுத்தம் செல்வது குறைந்து, முதுகுத் தண்டில் உள்ள தசை செல்கள் அழிவது, வலிமை குறைவது போன்ற பிரச்னைகள் குறையும்.

துவக்கத்திலேயே கவனிக்காமல் விட்டால், டிஸ்க் வீங்கி, நரம்புகளை அழுத்தும். இதனால் கால் வலி, மரத்துப் போவது, வலிமை குறைவது, சில நேரங்களில் சிறு நீர், மலம் கழிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

இது போன்ற நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். சிலருக்கு, அறுவை சிகிச்சை செய்தாலும், நரம்பு பாதிப்பு சரியாகாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

என்ன தீர்வு?

உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், அரை மணிக்கொரு முறை, இருக்கும் இடத்திலேயே, ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று வேலை பார்க்கலாம். முடிந்தால், நடக்கலாம். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, ஒரு நாளில், 10 – 15 கி.மீ., தான் ஓட்ட வேண்டும்.

இன்றைய வாழ்க்கை முறையில், இதையெல்லாம் தவிர்க்கவே முடியாது. ஆனால், பிரச்னைக்கான தீர்வு; உடல் பருமனைக் குறைப்பது, தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வதை தவிர்ப்பது, வாகனம் ஓட்டும் நேரத்தைக் குறைத்துக் கொள்வது போன்ற வாழ்க்கை முறையில் மாற்றம், முதுகுத் தண்டை சுற்றியுள்ள தசைகளை வலிமைப்படுத்த சில உடற்பயிற்சிகள் உள்ளன. இது போன்ற பிரத்யேக உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button