36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…!

தேவையானப்பொருட்கள்:

கிராம்பு, ஏலக்காய் – தலா 2,
தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன்,
சீரகம், சுக்குப்பொடி – தலா ஒரு டீஸ்பூன்,
கருப்பட்டி (அல்லது) வெல்லம் – 5 கிராம்.


செய்முறை:

இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்கவும்.

டீ போடும்போது, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப்போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு, அடுப்பை அணைத்து, தட்டுப் போட்டு மூடிவிடவும். ஐந்து நிமிஷங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

குறிப்பு:

டீயில் வேறு ஃப்ளேவர் வேண்டும் என நினைத்தால், கொதிக்கும்போது துளசி இலைகளைச் சேர்க்கலாம். அல்லது கால் டீஸ்பூன் டீத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடலாம்.

பலன்கள்:

ஹெர்பல் டீ தும்மல், தடுமனைக் குறைக்கும்.
கபத்தைக் குறைக்கும்.
குளிர்காலத்தில் இருக்கும் மந்தத்தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும்.

Related posts

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!

nathan

உலகிலேயே சாதனை படைத்த இந்தியா.! ஆண்களுக்காக கருத்தரிப்பு தடை ஊசி.!

nathan

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

nathan

வயிற்று பிரச்சினைகள் தீர சூடான தண்ணீர்!…

nathan

தலை சீவும் போது யோசிக்க வேண்டியவை

nathan

இந்த 2 பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

nathan

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?

nathan

அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லதாம்

nathan