ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் பிரேஸியர் (brassiere) அணிய வேண்டியதன் அவசியம், அதை எப்படி சரியாகத் தேர்ந்தெடுத்து, முறையாக அணிய வேண்டும், பிரேஸியர் அணியாததால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன…

* பெண்கள் பிரேஸியர் அணியவேண்டியது அவசியம். ஆனால், நாள் முழுவதும் அணிவது கட்டாயம் இல்லை. இரவு நேரங்களில் அதைத் தவிர்க்கலாம்.

* பொதுவாக, பருவம் அடைந்த வளரிளம் பெண்கள், தங்கள் மார்பக வளர்ச்சியின் ஆரம்ப வருடங்களில் ‘பிகினர்ஸ் பிரா’ அணிய ஆரம்பிக்கலாம். கொக்கிகள், கப்கள் இன்றி, சிறுமிகள் அணிவதற்கு வசதியான வடிவமைப்பில் இருக்கும்.

* இளம் பெண்கள், தங்களுக்குப் பொருத்தமான அளவு, வசதியான வடிவமைப்பு, தரமான துணி ஆகியவற்றின் அடிப்படையில் பிரேஸியரைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நடப்பது, வாகனம் ஓட்டுவது, ஓடுவது என உடல் இயக்கங்களின்போது மார்பகங்களுக்கு சப்போர்ட் கொடுக்கும் பிரேஸியர், மார்பகங்கள் தொய்வுறுவதிலிருந்து காக்கும்.
பிரேஸியர்
tufyufy
* மார்பக அளவு பெரிதாக உள்ள பெண்களுக்கு, பிரா அணிவது சப்போர்ட் கொடுப்பதுடன், கழுத்து மற்றும் முதுகுவலி ஏற்படாமலும் காக்கும்.

* ‘பாலூட்டும் தாய்மார்கள் பிரேஸியர் அணியக்கூடாது… அது, பால் சுரப்பைப் பாதிக்கும்’ என்பது மூடநம்பிக்கையே. அந்நேரத்தில் அளவில் பெரிதாகியிருக்கும் மார்பங்களுக்கு உரிய சப்போர்ட் கொடுக்கவும், பால் கட்டாமல் தவிர்க்கவும், ரத்த நாள வீக்கத்தைத் தடுக்கவும், மார்பக வலி ஏற்படாமல் இருக்கவும் பாலூட்டும் பெண்கள் நிச்சயமாக பிரேஸியர் அணிய வேண்டும்.

* மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மார்புப் பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட பின், அவர்களுக்கு மார்பகம் மூலம் கிடைக்கும் உடல் சமநிலை கிடைக்காமல் போகும். அவர்கள், மார்பு நீக்கம் செய்யப்பட்டோருக்கான பிரத்யேக மாஸ்டெக்டமி பிரா (Mastectomy Bra) வகையைப் பயன்படுத்தலாம். இதன் மூலம், அவர்கள் இழந்த உடல்வாகு ஈடுசெய்யப்படுவதுடன், அதுகுறித்த தன்னம்பிக்கையும் கிடைக்கப்பெறுவார்கள்.
பிரேஸியர்

* விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், அதற்கு ஈடுகொடுத்து சப்போர்ட் தரும் ஸ்போர்ட்ஸ் பிராவைப் பயன்படுத்தலாம். எனினும், விளையாடும்போது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். முழு நாளும் தொடர்ந்து அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், காட்டன் பிராக்களை அணிவதே சிறந்தது. சிந்தெடிக் பிராக்கள் வியர்வையை உறிஞ்சாது. வொயர் வைத்த பிராக்களைப் பயன்படுத்தும்போது, அழுத்தம் அதிகமானால் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
qqq
* சில பெண்கள், மார்புப் பகுதி சிறிதாக இருக்க corset பிராக்களை அணிகிறார்கள். இது, மார்புப் பகுதியை இறுக்குவதால் அவர்கள் மூச்சுவிட சிரமப்படுவதுடன், அங்கு ரத்த ஓட்டம் தடைபடுவதோடு, நாளடைவில் சுவாசக் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும்.

* எந்த வயது வரையிலும் பிரா அணியலாம். வயதானவர்கள், தேவையில்லை என நினைக்கும் தருணத்தில் பிரேஸியர் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம்.

* கறுப்பு நிற பிரா அணிந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மருத்துவ ரீதியாக வண்ணங்கள் எவ்விதத்திலும் புற்றுநோய்க்குக் காரணமாகவோ, நோய்த் தடுப்பாகவோ இருக்கவில்லை. அதேபோல, பிரா அணிந்தால் புற்றுநோய் ஏற்படும் என்று சொல்லப்படுவதும் அறியாமை. அதில் உண்மையில்லை” என்கிறார் டாக்டர் ஆனந்தி.

சரும நோய் மருத்துவரான டாக்டர் செல்வி ராஜேந்திரன், ”மார்பகப் பகுதியில் வியர்வை தங்க நேரிட்டால், எரிச்சல், அரிப்பு, படர்தாமரை போன்ற சருமத் தொற்றுகள் ஏற்படலாம். சிலருக்கு கட்டிகளும் ஏற்படலாம். இதிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய மெடிக்கேட்டட் பவுடர்கள் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றை மருத்துவ ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும்.
டாக்டர் செல்வி ராஜேந்திரன்

இயன்றவரை இரு வேளையும் குளித்துவிடுவது, இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். பெண்கள், மாதந்தோறும் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கட்டி, சருமத்தில் நிறமாற்றம், காம்பின் அமைப்பில் மாற்றம் என்று எதையாவது உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுக்கான வாய்ப்பு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button