மருத்துவ குறிப்பு

குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் உணவை கொடுக்காமல் குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள்.

குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்
* குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.

* குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். .ப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* தான் ஊட்டினால்தான் தன் குழந்தை சாப்பிடும் என்று சில தாய்மார்கள் பெருமை பொங்க சொல்வார்கள். ஆனால், அது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

* பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும்.

* ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம்.

* காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள். பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ருட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள். சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள்.

* ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

* நீண்ட நாள் பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் வேண்டாமே! செயற்கை நிறம், மணமூட்டப்பட்ட பொருள்களும், பேக் செய்யப்பட்ட தின்பண்டங்களும் உங்கள் செல்லங்களின் விட்டமின் சத்துக்களை உறிஞ்சுவதோடு, அவர்களின் நடவடிக்கைகளையே மாற்றுகிறது. "ஹைபர் ஆக்டிவிடி" எனப்படும் (அதிவேக செயல்பாடு உடைய) இயல்பும்கூட இதனால் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை, தவிர்த்து விடுங்களேன்!

* தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்ற டிபன்களின் வடிவங்களையும் உங்கள் கற்பனைக்கேற்ப, குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றலாமே! பிறை நிலா வடிவில் தோசை, பூ டிசைனில் சப்பாத்தி, சதுரக் கேக்குகளாக இட்லி என்று வேளைக்கு ஒன்றாக அசத்தினால், எந்தக் குழந்தை சாப்பிட அடம்பிடிக்கும்.

* உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.201606041202595461 can easily eat children SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button