ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்தம் மிக இன்றியமையாத ஒன்றாகும். ரத்தம் இல்லையென்றால் உடலில் எந்த செயலும் நடைபெற முடியாது. உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பல விளைவுகள் ஏற்படும். ரத்த அளவை பொறுத்தே உடலில் உள்ள செயல்பாடுகள் பிரிக்கப்படுகின்றன.
உறுப்புகளுக்கு சீரான அளவில் ரத்தத்தை எடுத்து செல்வதே இந்த ரத்த குழாய்கள் தான். இவற்றில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால் மரணம் கூட நமக்கு ஏற்படலாம்.
எவ்வாறு இந்த ரத்த குழாய்களில் அடைப்புகள் இன்றி வைத்து கொள்வது என்பதை இனி அறிவோம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
நீங்கள் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்கள், நட்ஸ்கள், அவகேடோ, போன்றவற்றை எடுத்து கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால், ரத்த குழாய்களில் எந்த வித தடையும் ஏற்படாமல் மற்ற உறுப்புகளுக்கு சீராக ரத்தம் செல்லும்.
மசாலாக்கள்
நமது வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து கொண்டாலே பல வித நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம் . இந்த மசாலா பொருட்கள் தான் உணவின் தன்மையை அதிகரிக்க செய்கிறது.
குறிப்பாக இலவங்கம், கிராம்பு, ஜாதிக்காய், இஞ்சி போன்றவை கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த குழாய்களில் எந்தவித அடைப்புகளும் இன்றி பார்த்து கொள்கிறது.
நார்சத்து கொண்ட உணவுகள்
முழு தானியங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவற்றில் அதிக அளவில் நார்சத்துகள் இருக்கும். இவற்றை உணவில் சரியான அளவு சேர்த்து கொண்டாலே ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால்கள் குறைந்து விடும். ஆதலால், தடையின்றி மற்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்லும்.
ஆலிவ் எண்ணெய்
சமையலுக்கும் பிற தேவைகளுக்கும் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆலிவ் எண்ணெய் சிறந்தது.
கெட்ட கொலஸ்டரோலை அடியோடு அழிப்பதில் ஆலிவ் எண்ணெய் சிறந்த ஆயுதமாகும். இதனால் ரத்த குழாய்களில் அடைப்புகள் இல்லாமல் ரத்த ஓட்டம் இருக்க கூடும்.
ப்ரோக்கோலி
ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும் இருக்க ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வைட்டமின் கே இதில் நிறைந்துள்ளதால் ரத்த குழாய்களை வலிமையுடன் வைத்து கொண்டு, அவற்றின் பாதையை சீராக வைக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீயின் நன்மைகளை பற்றி நாம் நன்கு அறிந்திருப்போம். தினமும் கிரீன் டீ குடித்து வந்தால் ரத்த குழாய்களில் அடைப்புகள் இல்லாமல் சீராக ரத்தம் பாயும்.
மேலும், இவை கொலஸ்ட்ராலை வெளியேற்றவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ளவும் செய்கிறது.
காபி
காபி குடிப்பதால் ஒரு சில நன்மைகளும் உள்ளன. ஆனாலும் இவற்றின் அளவை பொருத்து தான் இது தீர்மானிக்கப்படும்.
ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடித்தால் ரத்த குழாய்களில் அடைப்பு இல்லாமல் வைத்து கொள்ளும். மேலும், இதயம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்த காபி குறைகிறது.
தவிர்த்து விடுங்கள்..!
நீங்கள் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இறைச்சி, பால் பொருட்கள், பிரெஞ்சு பிரைஸ் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட கூடாது.
உணவில் இவற்றின் பங்கு அதிகமாக இருந்தால் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்.
அன்றாட உடற்பயிற்சி அவசியம்..!
ரத்த குழாய்கள் சீராக வேலை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் தினமும் காலையில் நடை பயிற்சி, ஜாகிங், நீந்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் உடல் நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைய கூடும். உடற்பயிற்சி முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
புகையும் குடியும்..!
பலர் நாளுக்கு நாள் இந்த குடி பழக்கத்துக்கும், புகை பழக்கத்துக்கும் அடிமை ஆகி கொண்டே போகின்றனர். இது உடல் நலத்திற்கு எவ்வளவு மோசமான விளைவை தரும் என்பதை உணர்ந்தும், உணராமலும் செய்து வருகின்றனர்.
புகையும், குடியும் உங்களின் ரத்த குழாய்களை அதிகம் பாதிக்க செய்யும். எனவே இந்த பழக்கங்களை முழுமையாக குறைத்து விடுவது நல்லது.