33.9 C
Chennai
Thursday, May 15, 2025
560.350.160.300.053.800.668.160.90
ஆரோக்கிய உணவு

அவசியம் படிக்க.. கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இன்றைய காலத்தில் பெண்களின் கருவளம் மிகவும் குறைந்த அளவிலேயே ஆரோக்கியமாக உள்ளது.

பெண்களின் கருவளம் சரி இல்லாமல் இருப்பதற்கு அவர்கள் உண்ணும் உணவு, பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை என பலவற்றை காரணங்களாக கூறலாம்.

இதனால் அவர்கள் கருத்தரிப்பதில் இடையூறை சந்திக்க நேரிடுகிறது. எனவே இங்கு சில உணவுகளை பெண்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கருவளத்தை அதிகரிக்க முடியும்.

மீன்

பெண்கள் மீன்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள வளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் கருமுட்டையின் ஆரோக்கியம் மேம்படும். அதிலும் சால்மன், சூரை மீன் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

முட்டை

முட்டையில் அதிகம் உள்ள புரோட்டீன் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எளிதில் கருத்தரிக்க உதவும். மேலும் முட்டையில் உள்ள வைட்டமின் டி மாதவிடாய் சுழற்சியை முறையாக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

கேல்

கேல் கீரையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இச்சத்து ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தால் கருமுட்டை பாதிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே இந்த கீரை கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பருப்பு வகைகள்

கரு முட்டையின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து அவசியமானது. ஆகவே கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தினமும் சிறிது பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது நல்லது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

வாழைப்பழம்

உடலில் வைட்டமின் பி6 குறைபாட்டின் காரணமாகத் தான் கருமுட்டையின் ஆரோக்கியம் மோசமாகிறது. எனவே தினமும் பெண்கள் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

அவகேடோ

பெண்கள் கருத்தரிக்க தேவையான வைட்டமின் டி சத்து அவகேடோ பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே திருமணமான பெண்கள் அவகேடோ பழத்தின் மில்க் ஷேக்கை தினமும் குடித்து வர கருமுட்டையின் ஆரோக்கியம் மேம்பட்டு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts

குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்

nathan

கர்ப்ப காலத்தில் சாப்பிட சிறந்த காய்கறிகள்

nathan

கேரட் துவையல்

nathan

டார்க் சாக்லேட் இதயத்திற்கு நல்லதா?

nathan

தூதுவளை சூப்

nathan

இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் எப்பவும் பத்திரமா இருக்கும் தெரியுமா!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை உதவும் புளி

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளிக்கு இதமாக இருக்கும் மைசூர் ரசம்

nathan