மிளகாய் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை உரத்தை தூவி விடுங்கள்.
உரங்கள் இட்டு வைத்திருக்கும் தொட்டி(நடுத்தரமான அளவு தொட்டி) மண்ணைக் கிளறி, 30 விதைகளைத் தூவுங்கள். விதைகள் 5 நாட்களில் முளைத்து, வளர ஆரம்பிக்கும்.
45 நாட்களில் மிளகாய் நாற்றுகள் தயாராகி விடும். அந்த நாற்றுக்களைப் பிடிங்கி உரமிட்ட தொட்டிகளில் ஒரு தொட்டியில் இரண்டு செடிகள் வீதம் நடவேண்டும்.
சரியான நிழலும் சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கும் பட்சத்தில் நட்ட 30 நாட்களுக்குள் பூக்கள் வர ஆரம்பிக்கும். அடுத்த 15 நாட்களில் மிளகாய் காய்க்க ஆரம்பிக்கும்.
பராமரிப்பு
மிளகாய் செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்போது 1 லிட்டர் தண்ணீரில் 30 மில்லி லிட்டர் வேப்பெண்ணெய், சிறிதளவு சவர்க்காரம் கலந்து இலைகள் மீது தெளித்துவிடுங்கள். இதுதவிர காலை, மாலையில் நீர் ஊற்றி வருவது அவசியம்.
தொட்டியில் நட்ட நாற்று வளர்ந்து 60 நாட்களில் மிளகாய் காய்க்க ஆரம்பிக்கும்.