மருத்துவ குறிப்பு

இந்த 7 விஷயங்கள் தெரிஞ்சால் போதும்… சர்க்கரை நோய்க்கே சவால் விடலாம்…தெரிஞ்சிக்கங்க…

நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலுமே மிக அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மருத்துவர்கள் அப்படித்தான் அவர்களை பயமுறுத்தி வைத்திருப்பார்கள். வெறுமனே மாத்திரை சாப்பிடுவது மட்டும் உங்களுடைய வேலை இல்லை. உங்களின் ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்து கொண்ட அதற்கேற்ப உணவுமுறையையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. இயல்புக்கு வாருங்கள்

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லா விஷயங்களுக்கும் பயந்து கொண்டே இருப்பார்கள். முதலில் இயல்பு நிலைக்கு வர வேண்டும். முழு ஆரோக்கியமுள்ளவர்கள் அல்ல என்பதை முதலில் உணர வேண்டும். சரியான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

2. மனஅழுத்தம்

சர்க்கரைநோய் மன அழுத்தத்தை தரக்கூடியது என்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் நீரிழிவு பற்றி நினைத்துகொண்டு இருப்பதால், அவர்கள் துன்பமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தங்கள் இலக்குகளையோ அல்லது தினசரி கடமைகளில் இருந்து தவறும் போது அவர்கள் அவர்களையே மன்னித்து கொள்ள வேண்டும் நிலை உண்டாகிறது.

3. நம்பிக்கை

சிறிது சிறிதாக நாங்கள் முடிந்தவரை எல்லாவற்றையும் சிறப்பாக செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கையை முதலில் தங்களுடைய மனதில் ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எல்லோராலும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். ஒருவர் நீரிழிவு நோயுடன் வாழும்போது, எல்லைமீறிய கோபம், கவலை, துக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளது . அதை கட்டுப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.

4. மாற்றங்கள்

சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய உணவு முறைகளையும் மருந்து முறைகளையும் எப்போதும் ஒரே மாதிரி கடைபிடிப்பதே முதலில் தவறு. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கூடும் போதும் குறையும் போதும் தங்களது வாழ்க்கைமுறையில் மாற்றம் செய்யவேண்டி இருக்கிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

5. டைப் 1 அறிகுறிகள்

தங்களைப் பற்றி சுற்றியுள்ளவர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை கொள்கிறார்கள். நல்ல ஆரோக்கிய பராமரிப்புக்கான சூழல் பற்றி கவலைஅடைகிறார்கள். குடும்பம் அல்லது நண்பர்களிடமிருந்து சரியான ஆதரவு இல்லாதபோது அவர்கள் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும் என்கிற பயம். இரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும் மன அழுத்தம் ஏற்படும். எப்போது என்ன எப்படி சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும்.

6. டைப் 2 பிரிவினர்

தோல்வி மற்றும் எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக வகை 2 நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள். நீரிழிவு நோயாளிகள் மற்ற விஷயங்களை விட தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். அப்படி கவனம் செலுத்தும் போது மட்டும் தான் உங்கள் நோயை கட்டுக்குள் வைக்கமுடியும்.

7. கட்டுப்பாடுகள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உள்ள உங்கள் வாழ்கை முறையிலேயே ,உங்கள் சிகிச்சை திட்டத்தை வகுக்கவேண்டும். அதாவது சில கட்டுப்பாடுகளை தங்களுக்குள்ளாகவே விதித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக மூன்று வேலை காபி குடிப்பவர் முதலில் ஒருவேளை மட்டும் சர்க்கரை இல்லாமல் குடித்து பழக வேண்டும். பிறகு படிப்படியாக சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கும் பழக்கம் வந்து விடும்.

8. எடை குறைப்பு முறைகள்

பெரிய இலக்குகளை சிறு சிறு படிகளாக அடையுங்கள், எப்போதும் ஒரே முயற்சியில் வெற்றி பெற இயலாது . 70 கிலோ எடை உள்ளஒருவர் எடை குறைக்க முயற்சி செய்யும் போது ஒரே அடியாக குறைக்க முயற்சி செய்யாமல் மாதம் இரண்டு கிலோவாக குறைக்க முயற்சிக்கலாம்.

9. நட்பு வட்டாரம்

நீங்கள் சோகமாகவோ கவலையாகவோ உணரும் போது உங்கள் குடும்பத்தினரிடமும் அல்லது நண்பர்களிடமும் உதவியை தயக்கமின்றி கேளுங்கள். எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள். நீங்கள் பழகும் வட்டாரத்தை பெருகிக்கொள்ளுங்கள் . அவர்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

இந்த சின்ன சின்ன விஷயங்களை உங்கள் வாழ்வில் கடைபிடிக்கத் தொடங்கினாலே மிக எளிதாக நீரிழிவைக் கடந்துவிட முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button