35.2 C
Chennai
Saturday, Jun 1, 2024
201804050817491184 1 kidney. L styvpf
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை சிறுநீரில் கல் வர காரணங்கள்,,,

நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன.201804050817491184 1 kidney. L styvpf

சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் சிறுநீர் கற்களாக உருவாகின்றன.

கல் வர காரணங்கள்

சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பாதிப்பு யாருக்கு?

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

அறிகுறிகள்: சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சிறுநீரில் இரத்தம் :

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுப்பது எப்படி? அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :

பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய பயனுள்ள காரியங்கள்!!!

nathan

ஆண்களே! உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதை தடுக்க சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா சாப்பிட்ட உடனே தேநீர் அருந்தினால் என்ன நடக்கும்..?!

nathan

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

ஆண்களே, ஆபாச படங்களை பார்ப்பது விறைப்புதன்மையை பாதிக்கும் என தெரியுமா?

nathan

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

nathan

சிறந்த கணவராக இருக்கும் ராசிகளின் பட்டியல்…பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூப்பர் டிப்ஸ்..நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்…!!

nathan

சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட்

nathan