26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
20180301 122312
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா?

மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு ஒருவர் மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

இது நோயெர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில் இருந்து தடுக்கும்.நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். இதனால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாங்காய் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்பது தெரியுமா? மேலும் பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை உட்கொண்டால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத்துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும்.

அதற்கு பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…20180301 122312

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா மாட்டுப்பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சர் இருப்பவர்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை மட்டும் அதிகரிக்க முடியவில்லையா? இதை முயன்று பாருங்கள்..

nathan

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?

nathan

பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்… அதன் நன்மைகளும்…

nathan

பெண்களுக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…முருங்கைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் இதெல்லாம் நடக்குமா?

nathan