28.7 C
Chennai
Sunday, Jul 27, 2025
pomegranate
ஆரோக்கிய உணவு

கருத்தரிப்பதில் பிரச்சனையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க… foods-can-help-you-get-pregnant-faster

ஒவ்வொரு பெண்ணுக்கும் விலைமதிப்பற்ற மற்றும் விருப்பமான தருணமாக இருப்பது ஒரு குழந்தைக்கு தாயாவது என நாங்கள் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் கர்ப்பமாவதற்கு ஒரு பெண் சிரமப்பட்டால், அது அவளின் மனநிலையை வெகுவாக பாதிக்கும். பெண்களின் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் அடங்கியிருந்தாலும் கூட, எளிமையான ஆனால் சிறந்த, சரியான உணவுகளை உட்கொண்டால் நல்ல பலனை அளிக்கும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் இவ்வகையான உணவுகள் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளை சீர்படுத்துவதோடு மட்டுமல்லாது, கருவுறும் தன்மையையும் மேம்படுத்தும். இதனால் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு கருவுறும் தன்மையை மேம்படுத்தும் முதன்மையான 20 உணவு வகைகளைப் பற்றி உணவு மற்றும் ஊட்டச்சத்து வல்லுனரான டாக்டர். நேஹா சன்வல்கா என்ன கூறுகிறார் என பார்க்கலாமா? சீக்கிரமே கருவுற நினைக்கும் பெண்கள் இவைகளை தங்களின் உணவுகளில் சேர்த்துக் கொண்டால், நல்ல செய்தியை விரைவில் கேட்கலாம்.

பச்சை இலை காய்கறிகள்

“பெண்கள் கர்ப்பமாவதற்கு திட்டமிட்டால், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள் சிறந்த உணவாக விளங்கும். கூடுதலாக திடமான கருப்பை அகப்படல உட்பூச்சு வளர்ச்சிக்கு உதவவும் செய்யும். மேலும் கருப்பையுடன் கருமுட்டையை இணைக்க இரும்புச்சத்து உதவிடும்.” என டாக்டர் நேஹா கூறுகிறார்.

முட்டைக்கோஸ்

நம்மில் பலருக்கும் முட்டைக்கோஸ் என்றால் பிடிப்பதில்லை. ஆனால் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு முட்டைக்கோஸ் கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

ப்ராக்கோலி

பிறநாட்டுக்குரிய உணவு என்று சில வருடங்களுக்கு முன்பு வரை கருதப்பட்டு வந்த ப்ராக்கோலி, கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

உருளைக்கிழங்கு

கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணின் உணவிலும் இவ்வகையான பழங்கள் கட்டாயமான ஒரு அங்கமாக விளங்க வேண்டும். அதிலுள்ள அதிக அளவிலான வைட்டமின் சி, கருப்பையில் இருந்து முட்டையை வெளியேற்ற உதவும்.

மாதுளை

இதில் உள்ள பல வித உடல்நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

வாழைப்பழம்

சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

முட்டைகள்

கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது முட்டை. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

சால்மன் மீன்

உங்களுக்கு மீன் சாப்பிட பிடிக்கும் என்றால், சால்மன் மீன் தான் சிறந்தது. கருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவான இதில் ஒமேகா 3 கொழுப்பமிலங்களும், இதர ஊட்டச்சத்துக்களும் வளமையாக உள்ளது. பெண்களின் கருவுறும் தன்மையை மேம்படுத்தும் முக்கிய பங்கை இது வகிக்கிறது.

கடல் சிப்பிகள்

கர்ப்பமாக விருப்பப்படும் பெண்கள் தங்கள் உணவில் ஆய்ஸ்டர்கள் என்னும் கடல் சிப்பிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கடல் உணவில் அதிக அளவில் ஜிங்க் உள்ளதால் அது கருமுட்டை உருவாக்கத்தில் உதவி புரிந்திடும். இதனால் கருவுறும் தன்மை மேம்படும்.

சிப்பி மீன்

சிப்பி மீன் என்பது மற்றொரு சுவைமிக்க கடல் உணவாகும். இதில் வைட்டமின் பி12 வளமையாக உள்ளது. உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை இயல்பு நிலையில் வைத்திடவும், கருவுற்ற முட்டையை கரு பதிக்கவும் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

மஞ்சள்

சமைக்கும் போதெல்லாம் உங்கள் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

மிளகாய்

மிளகாய் போன்ற கார வகை உணவுகளை உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கிய காரணம் இவ்வகை உணவுகள் உங்கள் கருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவாக விளங்குகிறது. ஒட்டு மொத்த உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். கூடுதலாக, இனப்பெருக்க அமைப்பிற்கு கூடுதல் ஆரோக்கியமான அளவில் இரத்தத்தை வழங்கிடும். இதுப்போக, எண்டோர்ஃபின் (மன அழுத்தத்தை போக்கும் ஹார்மோன்கள்) சுரப்பதிலும் மிளகாய் உதவி புரிவதால், உங்கள் உடல் அமைதி பெற்று கருவுறும் தன்மை ஊக்குவிக்கப்படும்.

பூண்டு

கருவுறும் தன்மையை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என வந்துவிட்டால், அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது பூண்டாக தான் இருக்கும். இந்த சமையலறை பொருளில் செலினியம் என்ற கனிமம் அதிகமாக இருக்கிறது. கர்ப்பமான ஆரம்ப கட்ட நேரத்தில் கருச்சிதைவை தவிர்க்க இது பெரிதும் உதவுகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பூசணி விதைகள்

கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு ஒரு அருமையான உணவாக விளங்குகிறது பூசணி விதைகள். அதற்கு முக்கிய காரணம் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித ஊட்டச்சத்துக்கள் அதில் அடங்கியுள்ளது. இருப்பினும், கரு வளர்ச்சி கட்டத்தில் அணுக்கள் பிரிப்பு செயல்முறைக்கு முக்கிய பங்கை வகிக்கும் ஜிங்க், இவ்வகை விதைகளில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பமிலங்களும், கரையா நார்ச்சத்துக்களும் வளமையாக உள்ளது. பெண்களின் கருவுறும் தன்மையை மேம்படுத்த இவைகள் முக்கிய பங்கை வகிக்கிறது. நார்த்திசுக்கட்டிகளின் அளவை குறைக்க கரையா நார்ச்சத்து உதவுகிறது. இதனால் கருவுறம் தன்மை மேம்படும்.

ஆலிவ் எண்ணெய்

ஆரோக்கியமான இதயத்தையும், உடலையும் பராமரிக்க ஆலிவ் எண்ணெய்யின் முக்கியத்துவம் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த எண்ணெயில் உள்ள மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் உள்ள அழற்சிகளை குறைக்கும். அதனால் சிக்கல் இல்லாத கர்ப்பத்திற்கு அது உறுதுணையாக இருக்கும்.

மீன் ஈரல் எண்ணெய்

ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் என்பது ஆரோக்கியமான கொழுப்புகளாகும். இது இயல்பான வளர்ச்சிக்கு உதவிடும். கூடுதலாக பெண்களுக்கு ஏற்படும் பலவித உடல் ஆரோக்கிய சிக்கல்களையும் தடுக்கும். பெண்களின் உடலில் உள்ள இனப்பெருக்க ஹார்மோன்களை சீர்படுத்த ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள மீன் ஈரல் எண்ணெய் உதவிடும். இதனால் பெண்களின் கருவுறும் தன்மையும் மேம்படும்.

பாதாம்

அநேகமாக அனைத்து நட்ஸ் வகைகளும் கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு நல்லது தான். அதில் மிகச்சிறந்தாக கருதப்படுவது பாதாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ளதால், இந்த நட்ஸ் கருவுறம் தன்மையை மேம்படுத்தும் சிறந்த உணவாக விளங்குகிறது.

குறிப்பு

நீங்கள் கர்ப்பமாக திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் கருவுறும் தன்மையை மேம்படுத்தும், மேற்கூறிய சூப்பர் உணவுகளை உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் வாய்ப்புகளும் அதிகம். இவையெல்லாம் சுலபமாக கிடைக்கக் கூடிய உணவுகளே. அதோடு நில்லாமல் இதன் விலையும் அதிகம் கிடையாது. அனைவராலும் வாங்கப்பட கூடிய விலையில் இருக்கும் உணவுகளே இவைகள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… கருவின் சிறந்த மன வளர்ச்சிக்கு கர்ப்பிணி பெண்கள் தினமும் எவ்வளவு பாதாம் சாப்பிடலாம் ?

nathan

உங்களுக்கு தெரியுமா பனஞ்சர்க்கரையில் உள்ள ஏராளமான பயன்கள்.!

nathan

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika

இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்!…

sangika

தேனை எப்படி சாப்பிடக்கூடாது

nathan

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்

nathan

பால் பருகும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்தாம்

nathan

இதுபோன்று உணவு சாப்பிட்ட‍பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம்!….

sangika

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்

nathan