27.7 C
Chennai
Saturday, May 17, 2025
refleksoterapia
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை கொடுக்கும். நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதங்களை பாதுகாப்பது எப்படி.

refleksoterapia

“குளிர்காலங்களில் நாம் பாத சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. பெரும்பாலானோர் பாதங்களை பராமதிப்பதில் கவனம் செலுத்துவது கிடையாது. இது கால போக்கில் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது.  பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி முறைகளை கடைப்பிடித்தாலே போதுமானதாக இருக்கும்.

பார்லர்களில் பாதங்களுக்கு என்று சிறப்பு பெடிக்கியூர் உள்ளது அதை மாதம் ஒரு முறை செய்துக்கொள்ளலாம். பார்லர் போகமுடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிலவற்றை செய்து பாதங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். பாதங்களுக்கு மேல் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு எளிய முறை ஸ்கரப் பயன்படுத்தலாம்.

ஸ்கரப் செய்ய தேவையான பொருட்கள் – 2 டியூஸ் ஸ்பூன் சக்கரை, கொஞ்சம் சோப் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணை மூன்றையும்  ஒரு பௌலில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும். இந்த எளிய முறை ஸ்கரப் நல்ல பயனளிக்கும்.

குதிகால் வெடிப்பைப் போக்கும் இந்த முறையில் அடுத்தாக  வெதுவெதுப்பான நீர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை மேற்கொள்ள தேவையான பொருட்கள் – வெதுவெதுப்பான நீர், கல் உப்பு , சோப் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய், பியூமிக் கல். ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சோப் ஆயில் மற்றும் கல் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனுள் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் மெருகேற்றும் கல்லான பியூமிக் கல்லை கொண்டு குதிகால்களைத் தேய்க்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த தோல்கள் நீங்கிவிடும். அதன் பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி மசாஜ் செய்துக்கொள்ளலாம், மாய்ஸ்சுரைசர் இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவேண்டும்.

கால்களில் உள்ள நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதிக சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். மிருதுவான செருப்பு பயன்படுத்துவது நல்லது. கடற்கரை மணல், தோட்டங்களில் வெறும் காலில் நடப்பது நல்லது. இது ரத்த ஓட்டத்தை சீரமைத்து பாதங்களுக்கு நன்மை தரும்.”

Related posts

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா..

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

கைகளை பராமரிக்க சில டிப்ஸ் கள் இதோ…

sangika

நம்ப முடியலையே…அறந்தாங்கி நிஷாவின் குழந்தையா இது? கொள்ளை அழகில் ஜொலிக்கும் சஃபா!

nathan

பாதங்களையும் கொஞ்சம் பாருங்க!

nathan

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

nathan

இந்த வயசுலயும் இப்படியா.? – காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம் …

nathan

தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய…!

nathan