அழகு குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…வேலைப்பளுமிக்க அலுவலகத்தில் இருந்து வந்த பின் ரிலாக்ஸ் செய்ய சில வழிகள்…!

இன்றைய காலத்தில் எந்த ஒரு வேலையை எடுத்துக் கொண்டாலும், அதில் இலக்கு இருப்பதால், அலுவலகங்களில் வேலைப்பளு அதிகம் இருக்கிறது. அலுவலகத்தில் நுழைந்தாலே, அப்போதிருந்து ஒருவித பதற்றம், மன அழுத்தம் போன்றவை ஆரம்பமாகி, அலுவலகம் முடிவதற்குள் மிகவும் சோர்வடைந்துவிடுகிறோம். பின் மறுநாள் வேலைக்கு செல்லவே விருப்பமில்லாமல், ஏதோதானோவென்று அலுவலகம் சென்று மேலும் மேலும் டென்சனாகி, முற்றிலும் சோர்ந்துவிட நேரிடுகிறது.

ஆனால் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு புத்துணர்ச்சியுடன் செல்ல வேண்டுமானால், அலுவலகம் முடிந்த பின்னர், நம்மை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். அதற்கு அலுவலகம் முடிந்த பின்னர் நமக்கு பிடித்த செயல்களையோ அல்லது வேறு ஏதேனும் செய்து வந்தால், நிச்சயம் ரிலாக்ஸ் ஆகலாம்.

இங்கு அலுவலகம் முடிந்த பின்னர் நம்மை எப்படி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்களேன்…

டைரி எழுதலாம்

அலுவலகம் முடிந்த பின் நாம் சோர்வுடன் இருப்பதற்கு முக்கிய காரணமே, நம் மனதில் புதைத்து, மறைத்து வைத்திருக்கும் விஷயங்கள் தான். அத்தகைய விஷயங்களை யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அனைத்தையும் நம்மால் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆகவே இந்நேரத்தில் நமக்கு உற்ற துணையாக இருப்பது டைரி தான். ஆம், தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தால், நிச்சயம் உங்கள் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, நீங்கள் ரிலாக்ஸ் ஆவீர்கள். முயற்சித்துப் பாருங்களேன்!

குளிக்கலாம்

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்றதும், ஷவரில் குளிக்கலாம். அதிலும் வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் குளித்தால், உடலில் உள்ள சோர்வு நீங்கி, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

டீ குடிக்கலாம்

நல்ல மூலிகை சேர்த்து செய்யப்பட்ட டீ குடிக்கலாம். இல்லாவிட்டால், க்ரீன் கூட குடிக்கலாம். இது கூட உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

நறுமணமிக்க மெழுகுவர்த்தி

குளித்து முடித்த பின்னர், அறையில் நல்ல நறுமணமிக்க மெழுகுவர்த்தியை ஏற்றி, சிறிது நேரம் படுக்கையில் படுத்தால், மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் நறுமணத்தால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

யோகா

மாலையில் கூட யோகா செய்யலாம். பொதுவாக யோகா மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை நீக்கும் திறன் கொண்டது. இப்படி தினமும் மாலையில் செய்து வந்தால், மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு புத்துணர்ச்சியுடன் செல்லலாம்.

ஜிம் செல்லலாம்

நீண்ட நேர வேலைக்கு பின், மாலையில் ஜிம் சென்றாலும் உடல் மட்டுமின்றி, மனமும் ரிலாக்ஸ் அடையும்.

சமைக்கலாம்

உங்களுக்கு சமையல் பிடிக்குமானால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்று, பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிடலாம். இதன் மூலமும் நிச்சயம் ரிலாக்ஸ் ஆக முடியும்.

துணையுடன் விளையாடலாம்

எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு இருந்தாலும், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்ததும் துணையுடன் கொஞ்சி விளையாடினாலோ, அல்லது அவர்களுடன் வெளியே சிறிது தூரம் வாக்கிங் சென்றாலோ உடல் மட்டுமின்றி மனமும் ரிலாக்ஸ் ஆகும்.

வீட்டை சுத்தம் செய்யலாம்

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்தாலும், நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும். மேலும் இதன் மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கலாம்

வீட்டில் குழந்தைகள் இருந்தால், ரிலாக்ஸ் ஆவதற்கு அவர்களை விட மிகவும் சிறப்பான வழி வேறு எதுவும் இல்லை. குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடினாலும் மன அழுத்தம் மற்றும் டென்சன் காற்றோடு பறந்து போய்விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button