36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சாக்லெட் பன்னகோட்டா வீட்டிலேயே செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

ஃப்ரெஷ் கிரீம் – 1 கப்,
பால் – 50 மி.லி.,
தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன்,
சைனா கிராஸ் – 1 கிராம்,
குக்கிங் சாக்லெட் – 100 கிராம்,
சர்க்கரை – 50 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 1/4 டீஸ்பூன்.

செய்முறை :

குக்கிங் சாக்லெட்டை பொடியான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சைனா கிராஸ் சேர்க்கவும்.

சைனா கிராஸ் தண்ணீருடன் நன்கு கலந்து கரையும் நிலைக்கு வரும் வரை கொதிக்க விடவும்.

இன்னொரு கடாயில் கிரீம், பால், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில், இந்தக் கலவை கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இத்துடன் நறுக்கிய சாக்லெட், வெனிலா எசென்ஸ் இரண்டையும் கலந்து சாக்லெட் முழுவதுமாக உருகும் வரை கைவிடாமல் கலக்கவும்.

திக்கான பதம் வந்தவுடன் இந்த கலவையை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 5 மணி நேரம் குளிர வைக்கவும்.

சூப்பரான சாக்லெட் பன்னகோட்டா ரெடி.

Related posts

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

nathan

முருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும்.

nathan

அறுகம்புல் சாறு தயாரிப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

nathan

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூப்பர் டிப்ஸ்! வயிற்றில் கொப்புளங்களை குணப்படுத்த உதவும் 5 உணவு பொருட்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகப் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய மருத்துவம் குணம் கொண்ட மக்காச்சோளம்..!

nathan

உங்களுக்கு தெரியுமா செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது…

nathan

சுவையான கோங்குரா தொக்கு

nathan

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan