45 peanut chutney
ஆரோக்கிய உணவு

சுவையான வேர்க்கடலை சட்னி

எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் வேர்க்கடலை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் குழந்தைகள் இச்சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

Peanut Chutney Recipe
தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1/3 கப்
சின்ன வெங்காயம் – 14
வரமிளகாய் – 2
பூண்டு – 2 பற்கள்
புளி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவை, வேர்க்கடலை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி கலந்தால், வேர்க்கடலை சட்னி ரெடி!!!

Related posts

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

nathan

அம்மா ரெசிப்பி; பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை!

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

தெரிஞ்சிக்கங்க…எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீரை நீங்கள் குடிக்க 6 காரணங்கள்..!!!

nathan

நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்….

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

30 வகை ரெடி டு ஈட்

nathan

உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!

nathan