பலா பழத்தில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் இரத்த அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் தடுக்கிறது.
இப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஹார்மோன் சுரக்கிறது. மேலும் பலா பழத்தை தைராய்டு உள்ளவர்கள் தினமும் சாப்பிடுவதால் தைராய்டு விரைவில் குணம் அடையும்.
ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பலா மரத்தின் வேரை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி, அந்த நீரில் பழத்தின் சாற்றுடன் கலந்து குடித்தால் ஆஸ்துமாவிற்கு விரைவில் குணமாகும்.
பலாப்பழ கொட்டையில் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது.
பலாப்பழத்தில் கண் பார்வைக்கு உதவும் விட்டமின் A அதிகம் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற உப்புச் சத்துக்களும் விட்டமின் C-யும் அதிகம் உள்ளது. புரதச்சத்து நிறைந்து உள்ளது.
பலாப்பழத்தை நெய் அல்லது தேன் கலந்து சாப்பிடுவதால் இதயம், மூளை வளர்ச்சி மற்றும் நரம்புகளும் வலுவடையும்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும். மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.
பலாப்பழத்தின் கொட்டைகளை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர ஐந்து முதல் ஆறு வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கம் மறைத்து விடும்.
பலாப்பழத்தில் கால்சியம் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் வலிமையாகவும் வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி மூட்டுவலி ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் மூட்டுவலியையும் தடுக்க முடியும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் பலாப்பழமும் ஒன்று. இது அல்சரை குணமாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி