கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவும் சில சக்தி வாய்ந்த கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பலன் பெறுங்கள்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது என்பது சாதாரணம் தான். மலச்சிக்கலுக்கு எத்தனையோ கை வைத்தியங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள முடியாது. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்குவதுடன், வயிற்றில் வளரும் சிசுவிற்கும் ஆபத்து ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவும் சில சக்தி வாய்ந்த கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ப்ளூபெர்ரி பழங்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை விரைவில் போக்கும். அதற்கு தினமும் 200 கிராம் ப்ளூபெர்ரிப் பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். ப்ளூபெர்ரி மலச்சிக்கலைப் போக்குவதோடு, அதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

ஆளி விதையும் மலச்சிக்கலைத் தடுக்கும். அதற்கு ஆளி விதையை வறுத்து பொடி செய்து, அன்றாட உணவின் மீது சிறிது தூவி சாப்பிட வேண்டும். மேலும் ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

சிலருக்கு வெதுவெதுப்பான நீர் நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், உடனடியாக கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

உலர்ந்த முந்திரிப் பழமும் மலச்சிக்கலுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பாதுகாப்பான உணவுப் பொருள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், தீவிர மலச்சிக்கல் உடனடியாக விலகும்.201612031403211829 constipation during pregnancy cause SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button