26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
1505986542 0559
சிற்றுண்டி வகைகள்

வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்…!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – கால் கிலோ
நெய் – ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைரசம் – ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் – அரை தேக்கரண்டி
தண்ணீர் – அரைக்கோப்பை
நெய் – நூறு கிராம்
முட்டை – நான்கு
வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – ஒன்று
கரம்மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதா மாவுடன் உப்பையும், நெய்யையும் சேர்த்து கைகளால் நன்கு பிசறவும். பிறகு எலுமிச்சை ரசத்தை சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து நான்காக மடித்து தேய்த்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அதனை குளிர்சாதன பெட்டியில் பத்து நிமிடம் வைக்கவும்.

இதேப்போல் மீண்டும் செய்து வைக்கவும். மூன்றாவது முறையாக ரொட்டியை தேய்த்து நெய்யை தடவி மடித்து உள்ளே வைக்காமல் மீண்டும் ஒரு முறை சமமாக தேய்த்து செவ்வக துண்டுகளாக போடவும். முட்டைகளை வேகவைத்து மஞ்சள்கருக்களை மட்டும் தனியே எடுத்து உதிர்த்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்று காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். பிறகு மிளகாய்தூள், கரம்மசாலா, உப்புத்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி உதிர்த்து வைத்துள்ள மஞ்சள்கருக்களை போட்டு நன்கு கலக்கி இறக்கி வைக்கவும். இதனை நறுக்கி வைத்துள்ள முட்டையின் வெற்றிடத்தில் வைத்து நிரப்பவும்.

தேய்த்து வைத்துள்ள செவ்வக துண்டு மாவில், முட்டை உள்ளே வைத்து மடித்து மூடவும். ஓரங்களை நன்றாக ஒட்டிய பிறகு, அவனில் 400 டிகிரி சூடாக்கி அரைமணி நேரம் வைக்கவும். பிறகு அவனின் வெப்பத்தை பாதியாக குறைத்து வைத்து பத்து நிமிடம் வைத்திருக்கவும். பப்ஸ் நன்கு வெந்து பொன்னிறமாக ஆனவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான பப்ஸை வீட்டிலே தயாரிக்கலாம்.
1505986542 0559

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

nathan

எள்ளு கடக் பூரி

nathan

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை

nathan

சுவையான ரவா வடை

nathan

மசால் தோசை

nathan

வெண்பொங்கல்

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan

கீரை புலாவ்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan