30 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கம்பு தோசை

சிறுதானியம் வகைகளில் ஒன்றான கம்பு உடலுக்கு மிகவும் நல்லது. இங்கு கம்பு மாவிலிருந்து தோசை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.

சுவையான சத்தான கம்பு தோசை
தேவையான பொருட்கள் :

புளித்த தோசை மாவு – 1/2 கப்
கம்பு மாவு – 1 கப்
உப்பு – தேவைக்கு
சீரகம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
ப.மிளகாய் – 2
வெங்காயம் – 2

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.

* இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

* அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு ரௌண்டாக ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.

* தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.

* பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.

* சுவையான சத்தான கம்பு தோசை ரெடி.

குறிப்பு :

புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு இல்லையெனில் தயிர் உபயோகப்படுத்தலாம்.

Related posts

பிரெட் பீட்சா

nathan

கருப்பட்டி இட்லி

nathan

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

nathan

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

nathan

மசாலா பூரி

nathan

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan