29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கோதுமை – கேழ்வரகு உருண்டை

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த இந்த உருண்டையை செய்து கொடுக்கலாம். இந்த கோதுமை – கேழ்வரகு உருண்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை – கேழ்வரகு உருண்டை
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்,
கேழ்வரகு மாவு – அரை கப்,
பாதாம் – 4,
முந்திரி – 10,
பொட்டுக்கடலை – அரை கப்,
நெய், நாட்டு சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை :

* கோதுமை மாவு, கேழ்வரகு மாவை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

* பொட்டுக் கடலையை கடாயில் சிறிது சூடாகும் வரை வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து கொள்ளவும்.

* பாதாம், முந்திரியை உடைத்து நெய்யில் வறுத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

* நெய்யை சூடாக்கி இதில் நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டவும்.

* பயணத்தின்போது களைப்பை நீக்கி, சக்தி கொடுக்கும் சத்தான ரெசிப்பி இது.

Related posts

வெங்காயத்தாள் பராத்தா

nathan

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

சுவையான மீன் கட்லெட் செய்வது எப்படி ?

nathan

நெய் அப்பம்

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

சுவையான தட்டு வடை

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா

nathan